TNPSC Thervupettagam

விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ் தங்கம் இறக்குமதி

November 8 , 2022 748 days 393 0
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) ஒரு பகுதியாக 25 கிலோ தங்கத்தை இறக்குமதி செய்யும் முதல் நகைக்கடை நிறுவனம் மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் ஆகும்.
  • இதன் படி, இந்தத் தங்கம் ஆனது ஐசிஐசிஐ வங்கி மூலம் 1% வரி தள்ளுபடியுடன் இறக்குமதி செய்யப்பட்டது.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்த ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் வரிப் பலன்களை இந்த நிறுவனம் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் விதிக்கப்பட்டுள்ள 5% இறக்குமதி கட்டணமானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தமானது 2022 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்