தமிழ்நாட்டின் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தல் (மிளகாய்) புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்ற இவ்வகை மிளகாய் ஆனது அதன் மிகத் தனித்துவமான சுவை, மிதமான காரம் மற்றும் அடர்ந்த சிவப்பு நிறத்திற்குப் பெயர் பெற்றது.
சம்பா மிளகாய் ஆனது விருதுநகர், சாத்தூர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் முக்கியச் சந்தைகளுடன் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
1972 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட இந்திய அரசிதழில், சாத்தூர், இராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்தச் சாத்தூர் சம்பா மிளகாய் சாகுபடி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் சம்பா (சன்னம்/மெல்லியது) என்று பிரபலமாக அறியப்படும் இந்த மிளகாய் வகை ஆனது தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.