TNPSC Thervupettagam

விரைவு அடையாள பட்டை

August 17 , 2017 2657 days 974 0
  • விரைவு அடையாள பட்டை(FASTag) வாகனங்களுக்கு அனைத்து தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை செப்டம்பர்-1 லிருந்து அமைக்கப்படுகிறது.
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது அனைத்து மின்னணு சுங்கச் சாவடிகளில் விரைவு அடையாள ஓட்டு கிடைக்கப்பெறும் வசதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய செலுத்து நிறுவனத்துடன் (National Payment Corporation Of India - NPCI) கலந்து ஆலோசனை வழங்கியுள்ளது.
  • இவை ஆன்லைன் மூலம் விரைவு அடையாள ஓட்டு விற்பனை செய்தல் மற்றும் ஆஃப்லைன் மூலம் சுங்கச் சாவடிகளுக்கு அருகில் பொதுச் சேவை மையங்கள் அமைத்து அதன் மூலம் விற்பனை செய்தல் ஆகும்.
  • விரைவு அடையாள பட்டை (FASTag)
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச் சாவடிகளில் மின்னணு சுங்கம் வசூலிக்கும் திட்டத்தை ஏற்படுத்திள்ளது. இது FASTag என்று பெயர்.
  • FASTag என்பது கருவியாகும். இது ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணுதல் (RFID) தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இது முன்பணம் செலுத்தப்பட்ட கணக்கிலிருந்து நேரடியாகச் சுங்கம் செலுத்துவதற்கான ஒரு தொழில்நுட்பமாகும்.
  • இது உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தப்படும் . இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் நிறுத்தவேண்டிய அவசியம் இல்லாமல் தடையின்றி பயணம் செய்ய முடியும்.
  • விரைவு அடையாள பட்டை (FASTag)ன் காலக்கெடு 5 ஆண்டுகள் ஆகும், பின்பு நமது தேவைக்கு ஏற்ப FASTag யை / மீள் நிரப்பு செய்து கொள்ளலாம்.
  • FASTag-ஆனது சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் இடைவிடாத இயக்கத்திற்கு உதவுகிறது. மற்றும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த சுங்கக் கட்டணத்தைப் பணமில்லாமல் செலுத்துவதற்கு வசதியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்