- மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் தனது முதல் கட்ட விரைவு அறிக்கை அமைப்பினை (Rapid Reporting System – RRS) செயல்படுத்தியுள்ளது.
- இந்த அமைப்பானது வலைதளத்தைக் கொண்டு இளம் பெண்களுக்கான அரசு திட்டங்களின் (Scheme for Adolescent Girls – SAG) செயல்பாட்டைக் கண்காணிக்கின்றது.
- இந்த அமைப்பினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் (Union Ministry of Women and Child Development - WCD) மற்றும் தேசிய தகவல் மையம் (National Informatics Centre - NIC) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
- இந்த அமைப்பானது இளம்பெண்களுக்கான திட்டங்களைக் கண்காணிக்கவும், விரைவாக தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், சரியான பயனாளிகளைக் கண்டறியவும், திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் வளங்கள் கசிவதை தடுக்கவும், அவற்றை ஒழுங்குபடுத்தவும் பெரிதும் உதவுகின்றது.
இளம் பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் (SAG)
- இளம் பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் (Integrated Child Development Services - ICDS) கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும்.
- நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 508 மாவட்டங்களில் இத்திட்டத்தினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் செயல்படுத்துகின்றது.
- இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்,
- இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க ஆதரவளிப்பது, இளம்பெண்கள் தங்கள் பள்ளிப் படிப்பையோ அல்லது திறன் வளர்க்கும் பயிற்சித் திட்டங்களையோ தொடரும் வகையில் ஊக்குவிப்பது.
- பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க ஆதரவளிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நலத் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவது.
ஆகியனவாகும்.