விரைவு நோய் எதிர்ப்புப் பொருள் சோதனையானது கண்டிப்பாக கண்காணிப்புப் சோதனையாகப் பயன்படுத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியா சீனாவிலிருந்து 5 இலட்சம் விரைவு நோய் எதிர்ப்புப் பொருள் சோதனை உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளது.
இந்தியா கோவிட் – 19 நோய்த் தொற்றை கண்டறிவதற்காக டிஎன்ஏவை அடிப்படையாகக் கொண்ட தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதித் தொடர் வினைச் (Reverse transcription polymerase chain reaction) சோதனையைத் தொடர்ந்து மேற்கொள்கின்றது.
இது தொண்டைச் சளியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் படுகின்றது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்படி (ICMR - Indian Council of Medical Research), இன்புளூயன்சா போன்ற அறிகுறிகள் மற்றும் சளி ஒழுகுதல் & தொண்டை வலி உள்ள நோயாளிகள் தலைகீழ் குறிமுறையாக்க பல்படிம நொதி தொடர் வினைச் சோதனையைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இச்சோதனையின் முடிவானது எதிர்மறையாக இருப்பின், அவர்கள் 7 நாட்களுக்குப் பின் நோய் எதிர்ப்புப் பொருள் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஒருவர் மீது அடுத்த 8 நாட்களுக்குப் பின் அவரது உடலில் உருவாகியுள்ள நோய் எதிர்ப்புப் பொருளைக் கண்டறிவதற்காக இந்தச் சோதனையானது மேற்கொள்ளப் படுகின்றது.