TNPSC Thervupettagam

விரைவு நோய் எதிர்ப்பொருள் சோதனை

April 20 , 2020 1731 days 768 0
  • இந்தியா, சீனாவிலிருந்து ரைபோ நியூக்ளிக் அமிலத்தை (Ribo Nucleic Acid)   பிரித்தெடுக்கும் கருவிகளையும் நோய் எதிர்ப்பொருள் சோதனைக் கருவிகளையும் வாங்குகிறது.
  • இந்தியா சீனாவிலிருந்து தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் (Personal Protective Equipment) இறக்குமதி செய்ய உள்ளது.
  • விரைவு  நோய் எதிர்ப்பொருள் சோதனையானது பல்படிம நொதி தொடர்வினைச் சோதனையை விடவும் விரைவானதாகும்.
  • இது சோதனை முடிவுகளை 15 முதல் 30 நிமிடங்களில் வழங்குகிறது.
  • இது ஒரு நபரின் விரலில் குத்துவதற்கு என்று ஓர் அறுவைக் கத்தியைப் பயன்படுத்துகிறது. மேலும் அவரின் நோய் எதிர்ப்பொருள்களைப்  பரிசோதிக்க அவரின் இரத்தத்தைச் சேகரிக்கிறது
  • இச்சோதனை எம்-எதிர்ப்புப் புரதங்கள் (IgM - Immunoglobulin M) மற்றும் ஜி-எதிர்ப்புப் புரதங்களைச் (IgG - Immunoglobulin G) சரிபார்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்