TNPSC Thervupettagam

விலங்குகளின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்குப் புதிய திட்டம்

November 14 , 2024 11 days 52 0
  • ‘தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்’ என்ற முன்னெடுப்பினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • இது "விலங்குவழியிலான சுகாதார அச்சுறுத்தல்களைத் தடுத்தல், கண்டறிதல், எதிர் நடவடிக்கை மேற்கொள்தல்" ஆகியவற்றில் நாட்டின் திறனை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது 2022 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் உருவாக்கப்பட்ட பெருந்தொற்று நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த நிதியின் அடிப்படை நோக்கம் ஆனது குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு எதிர்காலப் பெருந்தொற்றுகளை அடையாளம் காணவும், அது குறித்து அறிக்கையிடவும் மற்றும் கட்டுப்படுத்தவும் அவற்றின் திறனை வலுப்படுத்த உதவுவதாகும்.
  • ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகிய மூன்று அமலாக்க முகமைகளின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படும்.
  • இது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்