TNPSC Thervupettagam

விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவ ஊர்தி - 1962

November 8 , 2019 1717 days 939 0
  • ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவ ஊர்தி (AMMA - Animal Medical Mobile Ambulance) சேவையானது கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
  • தற்போது இது மீண்டும் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப் பட்டிருக்கின்றது.
  • இதற்கான கட்டணமில்லா எண் 1962 ஆகும்.
  • இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2016 ஆம் ஆண்டில் துவங்கி வைக்கப் பட்டது
  • விலங்குகளுக்கு,  அதிலும் குறிப்பாகக் கால்நடைகளின் இருப்பிடங்களுக்கேச்  சென்று சிகிச்சை அளிப்பதற்காக அம்மா சேவையானது அறிமுகப் படுத்தப்பட்டது.
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகமானது இந்தத் திட்டத்திற்கான தலைமை நிறுவனம் ஆகும்.
  • இந்தத் திட்டத்திற்கு தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தால் நிதியுதவி அளிக்கப் படுகின்றது.
  • இந்தத் திட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை பங்கு கொள்ளவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்