ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட விலங்குகளுக்கான நடமாடும் மருத்துவ ஊர்தி (AMMA - Animal Medical Mobile Ambulance) சேவையானது கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது இது மீண்டும் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப் பட்டிருக்கின்றது.
இதற்கான கட்டணமில்லா எண் 1962 ஆகும்.
இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2016 ஆம் ஆண்டில் துவங்கி வைக்கப் பட்டது
விலங்குகளுக்கு, அதிலும் குறிப்பாகக் கால்நடைகளின் இருப்பிடங்களுக்கேச் சென்று சிகிச்சை அளிப்பதற்காக அம்மா சேவையானது அறிமுகப் படுத்தப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகமானது இந்தத் திட்டத்திற்கான தலைமை நிறுவனம் ஆகும்.
இந்தத் திட்டத்திற்கு தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தால் நிதியுதவி அளிக்கப் படுகின்றது.
இந்தத் திட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை பங்கு கொள்ளவில்லை.