TNPSC Thervupettagam

விலங்குகளுக்கான COVID-19 தடுப்பூசி

June 14 , 2022 899 days 581 0
  • வேளாண்துறை அமைச்சகமானது, விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பூசியான “அனோகோவாக்ஸ்” என்ற தடுப்பூசியினை வெளியிட்டது.
  • ஹரியானாவின் ஹிசார் என்னுமிடத்தில் அமைந்துள்ள தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையத்தால் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது கொரோனா வைரஸின் டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய திரிபுகளுக்கு எதிராக விலங்குகளைப் பாதுகாக்கும்.
  • இந்தத் தடுப்பூசியை நாய்கள், சிறுத்தைகள், எலிகள், சிங்கங்கள் மற்றும் முயல்களுக்குப் பயன்படுத்தலாம்.
  • இது டெல்டா வகை திரிபின் தொற்று பகுதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு செயலிழந்த நச்சு வகை தடுப்பூசியாகும்.
  • இந்தியாவில் விலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி இது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்