TNPSC Thervupettagam

விலங்கு இனங்களின் பட்டியல்

July 9 , 2022 743 days 395 0
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் விலங்கினங்களின் தரவுத் தளத்தில் 540 புதிய உயிரினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இது ஒட்டுமொத்த விலங்கு இனங்களின் எண்ணிக்கையை 1,03,258 ஆக உயர்த்தி உள்ளது.
  • மேலும், 2021 ஆம் ஆண்டில், இந்தியத் தாவரங்களில் 315 இனங்கள் சேர்க்கப்பட்டன.
  • இது நாட்டிலுள்ள மொத்த மலர் வகைகளின் எண்ணிக்கையை 55,048 ஆக உயர்த்தி உள்ளது.
  • 540 விலங்கினங்களில், 406 இனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டதோடு, 134 இனங்கள் இந்தியாவில் புதிதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • மேலும் 2021 ஆம் ஆண்டில் பதின்மூன்று புதிய இனங்கள் கண்டறியப்பட்டன.
  • ஒரு பாலூட்டி இனம், 35 ஊர்வன இனங்கள் மற்றும் 19 வகையான மீன்கள் புதிதாக அடையாளம் காணப்பட்ட இனங்களில் அடங்கும்.
  • இந்தியா 1.03 லட்சம் இனங்களுடன் உலகின் மொத்த விலங்கு வகைகளில் 6.1 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்