TNPSC Thervupettagam

விலங்கு இன கண்டுபிடிப்புகள் – புதிய இனங்கள் மற்றும் புதிய பதிவுகள் 2023

July 8 , 2023 378 days 239 0
  • இந்தியாவானது, 2022 ஆம் ஆண்டில் 664 புதிய விலங்கு இனங்களை அதன் விலங்கின தரவுத் தளத்தில் சேர்த்துள்ளது.
  • இதில் 467 புதிய உயிரினங்கள் மற்றும் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப் பட்டுள்ள 197 உயிரினங்கள் ஆகியவை அடங்கும்.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 339 புதிய தாவர வகைகள் தரவுத் தளத்தில் சேர்க்கப் பட்டுள்ள நிலையில், இதில் 186 வகைகள் அறிவியலுக்குப் புதியவையாகவும் மற்றும் 153 வகைப் பாடுகள் புதிய இனப் பரவல் பதிவுகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த முக்கிய விலங்கினங்களில் மூன்று புதிய பாலூட்டி இனங்கள் மற்றும் ஒரு புதிய பதிவு ; இரண்டு புதிய பறவை இனங்கள் பதிவு; 30 புதிய ஊர்வன இனங்கள் மற்றும் அவற்றின் இரண்டு புதிய பதிவுகள்; ஆறு புதிய இருவாழ்வி இனங்கள் மற்றும் ஒரு புதிய பதிவு; மற்றும் 28 புதிய மீன் இனங்கள் மற்றும் எட்டு புதிய பதிவுகள் ஆகியன அடங்கும்.
  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விலங்கினங்களின் எண்ணிக்கையில் 583 இனங்களுடன் முதுகெலும்பில்லா உயிரினங்கள் மிக அதிகபட்சமாக உள்ள நிலையில் முதுகெலும்பு உடைய இனங்களின் எண்ணிக்கை இதில் 81 ஆகும்.
  • முதுகெலும்பில்லாத உயிரினங்களில் 384 இனங்களுடன் பூச்சி இனங்கள் அதிகம் காணப் படுகின்றன.
  • 2022 ஆம் ஆண்டில், கேரளாவில் அதிகபட்ச (82) அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • கர்நாடகாவில் பதிவான 64 புதிய இனங்கள் மற்றும் 24 புதிய பதிவுகள் மொத்தப் பதிவுகளில் 13.2% ஆகும்.
  • தமிழ்நாட்டில் பதிவான 71 புதிய இனங்கள் மற்றும் 13 புதிய பதிவுகள் ஆனது நாட்டின் அனைத்து புதிய இனங்கள் மற்றும் புதிய பதிவுகளில் 12.6% பங்கினைக் கொண்டு உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு தாவர இனங்கள் கண்டுபிடிப்புகள் பட்டியலானது, 2022 ஆம் ஆண்டின் போது இந்தியத் தாவரப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 339 வகைப்பாடுகளைக் கொண்டுள்ளது.
  • இந்தியத் தாவர இனங்களில் 319 இனங்கள் மற்றும் 20 உட்பிரிவு வகைப்பாடுகள் புதிது என்ற வகையில் இவை உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்