இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் (ICMR) தலைமையிலான முதல் வகையான ஆய்வில் பங்கேற்கும் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
சரணாலயங்கள் போன்ற பறவை-மனித தொடர்பு அதிகமாக உள்ள சில சூழல்களில் விலங்கு வழித் தொற்று நோய்களைக் கண்காணிப்பதற்காக வேண்டி கண்காணிப்பு மாதிரியை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டில், இந்த ஆய்வானது நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலும் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் பறவைகள் சரணாலயத்திலும் நடத்தப்பட உள்ளது.