இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக இமாச்சலப் பிரதேச அரசானது விலையில்லா இயற்கை விவசாய திட்டத்தினை (Zero Budget Natural Farming) அறிமுகம் செய்துள்ளது.
விலையில்லா இயற்கை விவசாய முறையில் தாவரங்களை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரையில் செலவற்றதாக இருக்கும்.
இத்திட்டமானது 2022ஆம் ஆண்டிற்குள் விவசாய உற்பத்திகளை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் முற்படுகின்றது.
விலையில்லா இயற்கை விவசாயம் என்பது எந்தவொரு உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அல்லது வேறு அந்நிய மூலக்கூறுகளும் சேர்க்கப்படாமல் பயிர்களை அதன் இயற்கை முறையில் வளர்க்கும் முறையாகும். இது இயற்கை வேளாண்மை (Organic Farming) முறையிலிருந்து வேறுபட்ட முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் இந்த முறையில் மண் புழுக்கள், மாட்டு சாணம் மற்றும் சிறுநீர், தாவரம் மற்றும் மனிதக் கழிவுகள் போன்ற உயிரி உரங்களைக் கொண்டு பயிர்களைக் காக்கின்றனர்.
இந்த முறையானது விவசாயிகளின் முதலீட்டுச் சுமைகளை குறைப்பதுடன் மண் வளங்களை பாதுகாக்கின்றது.
இந்த விவசாய முறையானது பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற ஓர் தீர்வும் ஆகும்.