TNPSC Thervupettagam

விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு

February 7 , 2019 1991 days 565 0
  • விலை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவு (price monitoring and research unit - PMRU) ஒன்றை ஏற்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்திருக்கின்றது.
  • மருந்துப் பொருட்கள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றின் விலை மீதுள்ள விதிமீறல்களைப் பின்தொடர அது எண்ணுகின்றது.
  • தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையமானது மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் இது போன்ற ஒரு அமைப்பை முன்மொழிந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு இந்த மாற்றம் வந்திருக்கின்றது.
  • மாநில சுகாதாரச் செயலாளர் இச்சங்கத்தின் தலைவர் ஆவார். மருந்தகக் கட்டுப்பாட்டாளர் இதன் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.
  • இது மாநில அரசுப் பிரதிநிதிகள், தனியார் மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
  • இந்த சங்கம் மருந்தகக் கட்டுப்பாட்டாளரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு செயற்குழுவையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்