மும்பையில் உள்ள தேசிய நோய்த்தடுப்பு ஆய்வியல் நிறுவனமானது பின்வருவனவற்றைக் கண்டறிவதற்காக விலை குறைவான “பாய்ன்ட் ஆப் கேர்” என்ற விரைவான நோயறிதல் சோதனையை வடிவமைத்துள்ளது.
மிகக் கடுமையான ஹீமோபிலியா A
வோன் வில்லிபிராண்ட் நோய் (VWD - Von Willebrand Disease)
மேலே குறிப்பிட்டுள்ள 2 நோய்களைக் கொண்ட நோயாளிகள் மூளையிலிருந்து இரத்தக் கசிவு, இரைப்பையிலிருந்து இரத்தக் கசிவு, மூக்கு அல்லது ஈறுகளிலிருந்து இரத்தக் கசிவு போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விளைவுகளைக் கொண்டிருப்பார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின்படி இந்த பரிசோதனைப் பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆகும். ஆனால் இவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.4000 முதல் ரூ.10,000 வரையாக உள்ளது.
VWD
இது காணப்படாத அல்லது குறைபாடு கொண்ட வோன் வில்லிபிராண்டு காரணியினால் (Von Willebrand Factor - VWF) ஏற்படக்கூடிய ஒரு மரபணுக் கோளாறாகும்.
VWF என்பது ஒரு இரத்தக் கசிவுப் புரதமாகும்.
இரத்தப்போக்கு ஏற்படும்போது VWF ஆனது இரத்தத் தட்டை அணுக்களை ஒன்றாக இணைப்பதற்கும் இரத்தப் போக்கைத் தடுக்க ஒரு உறைவை உருவாக்குவதற்கும் உதவுகின்றது.
குறைபாடு உள்ள மக்கள் போதிய VWF-ஐக் கொண்டிருப்பதில்லை.
எனவே, இது இரத்தம் உறையவும் இரத்தக் கசிவைத் தடுக்கவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.