தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ஆனது உக்ரைன் நாட்டில் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் விளாடிமிர் புடினுக்கு எதிராக சிறை பிடிப்புப் பற்றாணையினைப் பிறப்பித்துள்ளது.
இந்த சர்வதேஸ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை ஆதலால் ரஷ்யா அதன் பற்றாணைகளுக்கு உட்பட்டதில்லை.
ஆனால் ரஷ்யத் தலைவர் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் 123 உறுப்பினர் நாடுகளில் பயணம் மேற்கொள்வதில் இருக்கும் சுதந்திரத்தில் வரம்புகள் விதிக்கப் படும்.
இந்தியாவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
புடின் G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக, இந்த ஆண்டு இறுதியில் புது டெல்லிக்குப் பயணம் மேற் கொள்ள உள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது இனப் படுகொலை தொடர்பான வழக்குகளில் இருந்து உலக நாடுகளின் தலைவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை.