விளாடிமிர் புதின் - ரஷ்யா
March 22 , 2018
2439 days
761
- ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றுள்ளார்.
- நான்காவது முறையாக இரஷ்ய அதிபராக பதவியேற்க உள்ள விளாடிமிர் புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இரஷ்யாவை வழி நடத்த உள்ளார்.
- இரஷ்யாவின் மத்தியத் தேர்தல் ஆணையத்தினுடையத் தரவுகளின் படி எண்ணப்பட்ட8 சதவீத வாக்குகளில் விளாதிமிர் புதின் 76.67 சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளார்.
- 2012-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற புதின் 64 சதவீத வாக்குகளைக் கைப்பற்றினார். தற்போது புதின் அதைக் காட்டிலும் அதிகளவில் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
- நடப்பு இரஷ்ய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, இதுவே விளாதிமிர் புதினுடைய கடைசி ஆறு வருடப் பதவிக் காலமாகும்.
- இரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் 4 முறை மட்டுமே அதிபராக முடியும்.
- இரஷ்யாவின் முன்னாள் அதிபரான ஸ்டாலினுக்குப் பிறகு நீண்ட காலம் இரஷ்யாவின் அதிபராக ஆட்சி புரிந்தவர் விளாடிமிர் புதினே ஆவார்.
- விளாடிமிர் புதின் 2024 வரை இரஷ்ய அதிபராக பதவி வகிக்க உள்ளார்.
Post Views:
761