TNPSC Thervupettagam

விளையாடும் குறைபாடு – மனநல நிலைசார்ந்தவை

December 30 , 2017 2393 days 760 0
  • 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள 11-வது சர்வதேச நோய் வகைப்பாட்டியலின் (International Classification of Disease - ICD) படி, அதீத அளவில் விளையாடும் குறைபாட்டை (Gaming disorder) ஓர் மனநல நிலைசார்ந்த விவகாரமாக (Mental Health Condition) உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்த உள்ளது.
  • அமெரிக்க உளவியல் மனநல நிபுணர் சங்கத்தினால் வெளியிடப்படும், மனநல சிகிச்சை வல்லுநர்களின் பைபிள் என்றழைக்கப்படும் V-வகை நிலை மனநல குறைபாட்டுக்கான நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டில் ஏற்கெனவே கேமிங் குறைபாடு மனநல நிலை சார்ந்த விவகாரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது
  • நோய்களை வகைப்படுத்துவதற்காக, நோயறிதல் வழிமுறைகளின் தொகுப்பு அமைவை (system of diagnostic codes) வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஆரோக்கிய பராமரிப்பு வகைப்படுத்து அமைப்பே ICD ஆகும்.
  • உலக சுகாதார நிறுவனத்தினால் இத்தகு வகைப்படுத்துதல் அமைப்பு நிர்வகிக்கப்படுகின்றது.
  • குறிப்பிட்ட கால அளவில் திருத்தியமைக்கப்படும் இந்த வகைப்பாட்டு முறையில் தற்போது 10-வது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்