பொம்மையபாளையம் பள்ளத்தாக்கு ஆனது ஆரோவில் உயிரியல் பகுதியைச் சுற்றி உள்ள பள்ளத்தாக்குகளின் ஒரு பகுதியாகும்.
பல நூற்றாண்டுகளாக சில மழை நீரோட்டங்களால் மேல் மட்ட மண் மற்றும் பாறைத் துண்டுகள் வங்காள விரிகுடாவிற்கு அரித்துச் செல்லப்பட்டதன் காரணமாக அவை உருவாக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசானது, இந்தப் பள்ளத்தாக்கினை ஒரு புவியியல் பாரம்பரியத் தளமாக அறிவித்து அதனைப் பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த செங்குத்தான பக்கவாட்டுக்களைக் கொண்ட ஒரு குறுகிய மற்றும் ஆழமானப் பள்ளத்தாக்கு ஆனது, சராசரியாக 7 மீட்டர் உயரம், 30 மீட்டர் அகலம் கொண்டது.
இது சுமார் 23.03 முதல் 5.33 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக மதிப்பிடப்பட்ட மியோசீன் சகாப்தத்தைச் சேர்ந்ததாகும்.
இந்தப் பள்ளத்தாக்குகள் ஆனது எந்தவொரு கண்டத் தட்டு நடவடிக்கைகளினாலும் அல்லாமல் பல ஆண்டுகளாக நிகழ்ந்த மண் அரிப்பின் ஒட்டு மொத்த விளைவின் காரணமாக தோன்றியதாகும்.