TNPSC Thervupettagam

விவசாயம் மற்றும் வனத்துறை மீதான நான்காவது ஆசியான்-இந்தியா அமைச்சரவைக் கூட்டம்

January 14 , 2018 2379 days 699 0
  • விவசாயம் மற்றும் வனத்துறை மீதான நான்காவது ஆசியான்-இந்தியா அமைச்சரவைக் கூட்டம் புதுதில்லியின் நாஸ்க் வளாகத்தில் நடத்தப்பட்டது.
  • இந்தக் கூட்டத்திற்கு இந்தியத் தரப்பில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கும் தாய்லாந்தின் சார்பில் விவசாயம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் அமைச்சர் கிரிசடா யூன்ராச்சும் தலைமை தாங்கினர்.
  • கூட்டத்தின் நோக்கம்:
    • பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளத்தின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் தன்மையை அதிகரித்தல்,  தேசிய இயற்கை வள மேலாண்மை ஆகியவற்றிற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்துதல்.
    • இந்தப் பகுதியில் உணவு விநியோகத்தில் உள்ள விலையின் ஏற்ற இறக்கங்களை சரி செய்வதற்காக உணவுப் பாதுகாப்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட நிபுணர் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது

ஆகியனவாகும்.

  • விவசாயம் மற்றும் வனத்துறை மீதான 5வது ஆசியான்-இந்தியா அமைச்சரவைக் கூட்டம் 2019ல் புருனே தாருசலேமில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்