இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள விவசாயக் குடும்பங்களின் நிலைமை மீதான மதிப்பீட்டு ஆய்வினை (SAS) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தேசியப் புள்ளியியல் அலுவலகத்தினால் (NSO) நடத்தப்பட்டது.
இது 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு ஜூன் மதம் வரையிலான வேளாண் ஆண்டின் 77வது சுற்றினை (ஜனவரி 2019- டிசம்பர் 2019) குறிக்கிறது.
வேளாண் வருமானம் என்பதனுள் தினக் கூலியிலிருந்து கிடைக்கும் வருமானம், ஒரு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்ததன் மூலம் கிடைக்கும் வருமானம், பயிர் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் நிகர வருவாய், கால்நடைகளை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் நிகர வருவாய் மற்றும் வேளாண் சாராத வணிகத்தின் மூலம் கிடைக்கும் நிகர வருவாய் ஆகியவை அடங்கும்.
ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருமானமானது ரூ.29,348 என்ற மதிப்புடன் இந்திய அளவில் மேகாலயா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
ஒரு வேளாண் குடும்பத்திற்கான சராசரி மாத வருமானத்தில் பஞ்சாப் மாநிலம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் முக்கியப் பயிர்களில் அரிசி, கோதுமை, சோளம், பஜ்ரா, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகியவை அடங்கும்.
ஆனால் அவற்றுள் அரிசி மற்றும் கோதுமை மட்டுமே அங்கு விளைக்கப்படும் மொத்த பயிர்ப் பரப்பளவில் 80 சதவிகிதப் பரவலைக் கொண்டுள்ளன.
இதில் தமிழகத்தின் வருமானம் 11,924 ஆகவும், அகில இந்தியச் சராசரி 10,218 ஆகவும் உள்ளது.