TNPSC Thervupettagam

விவசாயிகள் தற்கொலைகள் பற்றிய NCRB தரவு 2022

December 7 , 2023 353 days 249 0
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் விவசாயத் துறையில் 11,290 தற்கொலைகள் நடந்து உள்ளன.
  • பலியானவர்களில் 5,207 பேர் விவசாயிகள் மற்றும் 6,083 பேர் விவசாயத் தொழிலாளர்கள் ஆவர்.
  • 2022 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலைகள் ஒரு துயரமான எழுச்சியைக் கண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயியாவது தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
  • அன்றாட விவசாயக் கூலியை நம்பி வேலை செய்யும் தொழிலாளர்களின் தற்கொலைகள், விவசாயிகள் மற்றும் உழவர்களிடையே உள்ள தற்கொலைகளின் எண்ணிக்கையை மிஞ்சி விட்டன.
  • மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் (4,248) பதிவாகியுள்ள நிலையில் இது இந்தியாவில் 38% வழக்குகளுக்கு பங்களிக்கிறது.
  • இம்மாநிலத்தின் பெரும்பாலான தற்கொலைகள் விதர்பா மற்றும் மராத்வாடா ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
  • அதனைத் தொடர்ந்து கர்நாடகா (2,392), ஆந்திரப் பிரதேசம் (917), தமிழ்நாடு (728), மற்றும் மத்தியப் பிரதேசம் (641) ஆகியவை உள்ளன.
  • 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகப்பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் தற்கொலைகள் 42.13% என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • அதே சமயம் அது ஆந்திராவில் 16% என்ற அளவு குறைந்துள்ளது.
  • நாட்டில் பதிவாகும் மொத்தத் தற்கொலைகளில் 7-8 சதவீதம் விவசாய தற்கொலைகள் ஆகும்
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் குறித்த அதன் வரையறையைக் குறிப்பிடவில்லை.
  • குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிலாளர்களை வேறுபடுத்துவதற்கு விளையும் நிலங்களின் அளவு பயன்படுத்தப் படுகிறது.
  • 1 ஹெக்டேர் (2.5 ஏக்கர்) வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குறு விவசாயிகள் என்றும், 1-2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்போர் சிறு விவசாயிகள் எனவும் கூறப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்