TNPSC Thervupettagam

விவேகானந்தரின் சிகாகோ உரை – 125வது வருடம்

September 11 , 2017 2632 days 1031 0
  • இந்த வருடம் விவேகானந்தர் நிகழ்த்திய சிகாகோ உரையின் 125வது வருடத்தை குறிப்பிடுகிறது. சுவாமி விவேகானந்தர் 1893ம் ஆண்டு நடந்த உலகச் சமய மாநாட்டில் இந்தியாவையும் இந்துமதத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தினார். இது உலகச் சமய மாநாட்டின் முதல் கூட்டமாகும். இது செப்டம்பர் 11 முதல் 27 வரை 1893ம் வருடம் நடத்தப்பட்டது. உலகின் பலபகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  • அவர் தனது உரையை “அமெரிக்காவின் சகோதரிகளே மற்றும் சகோதரர்களே” என்று மரியாதையுடன் ஆரம்பித்தார். இந்த வார்த்தைகளுக்காக அரங்கில் கூடியிருந்த 7000 பிரதிநிதிகள் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று பாராட்டியதை அவர் கிடைக்கப் பெற்றார். அமைதி திரும்பியப் பின்பு அவர் தனது உரையைத் தொடங்கினார். அவர் தனது உரையைச் “சண்டைவேண்டாம் உதவி செய்யுங்கள்”, “அழிவுவேண்டாம் ஒன்றாய் இருங்கள்”, “வேற்றுமை வேண்டாம் ஒற்றுமையும் அமைதியும் தேவை” என்ற வேண்டுகோள்களோடு முடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்