விஷமுள்ள பாம்புக்கடியினை 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலப் பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் ஓர் அறிவிக்கக் கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஷமுள்ள பாம்புக்கடி என்பது விஷப்பாம்பு கடித்தால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான மருத்துவப் பாதிப்பு நிலையாகும்.
கிராமப்புறம் மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது ஒரு மிகவும் முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது.
இந்த ஒரு நடவடிக்கையானது சிறந்த தடுப்பு உத்திகளுக்கு வழி வகுக்கும், உயிரிழப்பு விகிதங்களைக் குறைக்கும் மற்றும் மாநிலம் முழுவதும் இதற்கான முக்கிய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பானது பாம்புக்கடியை உலகளாவிய பெரும் பொது சுகாதாரப் பிரச்சினையாக அங்கீகரித்து, உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் குறைபாடுகளைக் குறைப்பதற்கான ஓர் உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.