TNPSC Thervupettagam

விஸ்தாரா - நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள்

May 15 , 2023 559 days 320 0
  • ஒரு மிகப்பெரிய விமானத்தினை நீண்ட தூர விமானப் பயணத்தில் இயக்குவதற்கான நிலைத் தன்மை மிக்க ஒரு விமான எரிபொருளை (SAF) பயன்படுத்திய முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை விஸ்தாரா பெற்றுள்ளது.
  • விஸ்தாரா என்பது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனம் ஆகும்.
  • தென் கரோலினாவின் சார்லஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.
  • நிலைத்தன்மை மிக்க விமான எரிபொருள் என்பது வழக்கமான ஜெட் எரிபொருளுக்கு ஒரு தூய்மையான மாற்றாக அமையும்.
  • இது எரிபொருளின் பயன்பாட்டுச் சுழற்சி முழுவதுமான கார்பன் வெளியேற்றத்தை 80 சதவீதம் வரை குறைக்கக் கூடியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்