டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு முயற்சியான விஸ்தார விமான நிறுவனம், 280 விமான நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் உறுப்பினராகியுள்ளது.
விஸ்தாரா, பாதுகாப்பிற்கான தன்னுடைய பொறுப்புகளை அளித்து சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாட்டு பாதுகாப்பு தணிக்கையை (IATA Operational Safety Audit - IOSA) வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் மட்டுமே சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆவர்.