TNPSC Thervupettagam

விஸ்வகர்மா யோஜனா

August 21 , 2023 336 days 191 0
  • பாரம்பரியம் சார்ந்த திறன்களைக் கொண்ட மக்களுக்கு உதவுவதற்கான பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது, குரு - சீடர் பரம்பரையை (குரு - சிஷ்யா பரம்பரை) அல்லது கை வினைஞர்களால் குடும்பம் வழியாக பின்பற்றப் பட்டு வந்த பாரம்பரியத் திறன்களை வலுப்படுத்தி, மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் 30 லட்சம் கைவினைக் கலைஞர்களின் குடும்பங்கள்  பயனடையும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், திறன் மேம்பாடு, கருவித் தொகுப்பிற்கான ஊக்கத் தொகை, எண்ணிமப் பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவு ஆகியவற்றையும் இத்திட்டம் மூலம் வழங்கப்பட உள்ளது.
  • முந்தையத் தலைமுறையிலிருந்து வழி வழியாகப் பின்பற்றப்பட்டு வந்த மட்பாண்டத் தொழில், கொல்லர் தொழில், கட்டுமானம், தையல், படகுக் கட்டுமானம் போன்றப் பாரம்பரியத் திறன்களை இத்திட்டத்தின் மூலம் அரசு ஊக்குவிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்