காலனித்துவம், கருத்துவாதம், மதம் மற்றும் அரசியல் மீதான விமர்சனத்தால் அறியப்பட்டவரான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நய்ப்பால் தனது 85வது வயதில் ஆகஸ்டு 11ஆம் தேதியன்று காலமானார்.
சர்.வித்யதார் சூரஜ்பிரசாத் நய்ப்பால் ஆகஸ்ட் 17, 1932 அன்று ட்ரினிடாடில் பிறந்தார்.
நய்ப்பால் 30க்கும் மேற்பட்ட கற்பனை மற்றும் கற்பனையல்லாத புத்தகங்களை எழுதியுள்ளார். ‘தி மிஸ்டிக் மஸ்ஸீர்’ என்பது அவரது முதல் புத்தகமாகும்.
அவரது மிகவும் பிரபலமடைந்த நாவலான ‘A House for Mr.Biwas’ ஆனது 1961ல் வெளியிடப்பட்டது.
இவர் 1971ஆம் ஆண்டில் மேன்புக்கர் பரிசு மற்றும் 1990ல் இலக்கியத்திற்கான சேவைக்காக நைட்ஹுட் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2010ல் இவருக்கு வழங்கப்பட்டது.