சொத்துகள் குறித்து ஆலோசனை வழங்கும் நிறுவனமான Anarock என்ற நிறுவனமானது நவம்பர் மாதம் வரை நாட்டில் உள்ள நிலைமதிப்பு ஒழுங்குமுறை ஆணையங்களின் (RERA - Real Estate Regulatory Authority) செயல்திறன் குறித்து ஆய்வு செய்தது. மேலும் அந்நிறுவனம் இந்த ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வீட்டுத் திட்டப் பதிவுகளில் இந்தியாவில் உள்ள நிலமதிப்பு ஒழுங்குமுறை ஆணையங்களில் தமிழ்நாடு நிலமதிப்பு ஒழுங்குமுறை ஆணையமானது தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையின்படி, பதிவுகள் குறித்த தரவரிசையில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து குஜராத், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த தரவரிசையில் இடம் பிடித்துள்ளன.
தமிழ்நாடு நில மதிப்பு (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) விதிகள், 2018-ன் படி குறைந்த பட்சம் 8 அலகுகளுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து வீட்டுவசதித் திட்டங்களும் TNRERA-ல் (Tamil Nadu Real Estate Regulatory Authority - TNRERA) கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.