இந்தியக் குடியரசுத் தலைவர் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் துணை இராணுவப் படை வீரர்கள் ஆகியோருக்கு 84 விருதுகள் மற்றும் பதக்கங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த விருதுகள் 1 கீர்த்தி சக்ரா, 9 சௌரிய சக்ரா, 5 சேனா ஆணைப் பதக்கங்கள் (வீரதீர செயல்), 60 சேனா பதக்கங்கள் (வீரதீர செயல்), 4 நவோ சேனா விருதுகள் (வீரதீர செயல்), மற்றும் 5 வாயு சேனா விருதுகள் (வீரதீரச் செயல்), ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
நாட்டின் இரண்டாவது உயரிய அமைதி வழி வீரதீரச் செயல் விருதான கீர்த்தி சக்ரா விருதானது ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தலைமைக் காவலரான அப்துல் ரஷித் கலாஸ் (இறப்பிற்குப் பின்பு) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சௌரிய சக்ரா என்பது மூன்றாவது உயரிய அமைதிவழி வீரதீரச் செயல் விருதாகும். அசோக் சக்ரா என்பது உயரிய அமைதிவழி வீரதீரச் செயல் விருதாகும்.
மொத்தமாக 926 காவல் துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
வீரதீரச் செயலுக்கான காவல்துறை விருதுகள் 215 காவல் துறையினருக்கு, அவர்களின் வீரதீரச் செயலைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.
தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் காவல் துறை விருதானது 80 காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பான (மெச்சத்தக்க) பணிக்கான காவல்துறை விருதானது 631 காவல் துறையினருக்கு வழங்கப் பட்டுள்ளது.