TNPSC Thervupettagam

வீரதீர செயல் மற்றும் காவல் துறை விருதுகள்

August 18 , 2020 1440 days 814 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் துணை இராணுவப் படை வீரர்கள் ஆகியோருக்கு 84 விருதுகள் மற்றும் பதக்கங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • இந்த விருதுகள் 1 கீர்த்தி சக்ரா, 9 சௌரிய சக்ரா, 5 சேனா ஆணைப் பதக்கங்கள் (வீரதீர செயல்), 60 சேனா பதக்கங்கள் (வீரதீர செயல்), 4 நவோ சேனா விருதுகள் (வீரதீர செயல்), மற்றும் 5 வாயு சேனா விருதுகள் (வீரதீரச் செயல்), ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
  • நாட்டின் இரண்டாவது உயரிய அமைதி வழி  வீரதீரச் செயல் விருதான கீர்த்தி சக்ரா விருதானது ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தலைமைக் காவலரான அப்துல் ரஷித் கலாஸ் (இறப்பிற்குப் பின்பு) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சௌரிய சக்ரா என்பது மூன்றாவது உயரிய அமைதிவழி வீரதீரச் செயல் விருதாகும். அசோக் சக்ரா என்பது உயரிய அமைதிவழி வீரதீரச் செயல் விருதாகும்.
  • மொத்தமாக 926 காவல் துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • வீரதீரச் செயலுக்கான காவல்துறை விருதுகள் 215 காவல் துறையினருக்கு, அவர்களின் வீரதீரச் செயலைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.
  • தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் காவல் துறை விருதானது 80 காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறப்பான (மெச்சத்தக்க) பணிக்கான காவல்துறை விருதானது 631 காவல் துறையினருக்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்