குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 12 பேருக்கு அவர்களின் மறைவிற்குப் பின்னதாக வழங்கப்பட்ட விருதுகள் உட்பட ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் 93 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கினார்.
இவற்றில் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஒரு விருது உட்பட இரண்டு கீர்த்தி சக்ரா விருதுகள்; மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட மூன்று விருதுகள் உட்பட 14 சௌர்ய சக்ரா விருதுகள், ஒரு துணை சேனா பதக்கம் (வீரதீரச் செயல்); மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஏழு விருதுகள் உட்பட 66 சேனா பதக்கங்கள்; இரண்டு நவோ சேனா பதக்கம் (வீரதீரச் செயல்) மற்றும் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஒரு விருது உட்பட எட்டு வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) அடங்கும்.
ஆயுதப் படைகள் மற்றும் பிற துறைப் பணியாளர்களுக்கு வேண்டி 305 பாதுகாப்பு விருதுகளையும் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இவற்றில் 30 பரம் விஷிஷ்ட் சேவா பதக்கங்கள்; ஐந்து உத்தம் யுத் சேவா பதக்கங்கள்; 57 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்கள்; 10 யுத் சேவா பதக்கங்கள்; சேனா பதக்கத்திற்கு இணையான பதக்கம் (கடமைப்பற்று); 43 சேனா பதக்கங்கள் (கடமைப்பற்று); எட்டு நவோ சேனா பதக்கங்கள் (கடமைப்பற்று); 15 வாயு சேனா பதக்கங்கள் (கடமைப் பற்று); நான்கு விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் 132 விஷிஷ்ட் சேவா பதக்கங்களை குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், எட்டு கடலோரக் காவல்படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம் மற்றும் தத்ரக்சக் பதக்கத்தினையும் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கச் செய்தானார்.
குடியரசுத் தலைவரின் பதக்கப் பட்டியலில் தமிழக காவல்துறையின் 21 காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஊர்க்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்பு பிரிவின் கீழ், தமிழ்நாடு ஊர்க் காவல் படையின் உதவித் தலைவர் மஞ்சித் சிங் நாயர், மகத்தான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றார்.