விநாயக் தாமோதர் சவார்க்கரின் 136வது பிறந்த தினம் மே 28 அன்று கொண்டாடப்பட்டது.
இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர், வழக்குரைஞர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்துத்துவக் கொள்கைகளை உருவாக்கியவர் ஆவார்.
இவர் 1883 ஆம் ஆண்டு மே 28 அன்று மகாராஷ்டிராவின் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பஹபூர் கிராமத்தில் பிறந்தார்.
இவர், தனது “இந்துத்துவா” என்ற புத்தகத்தில் இரு நாட்டுக் கொள்கையை விவரித்துள்ளார். இப்புத்தகம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என்பவர்கள் இரு தனி நாடுகள் என்று குறிப்பிடுகின்றது.
1937 ஆம் ஆண்டில் இதை இந்து மகாசபை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது.
2002 ஆம் ஆண்டில் இவரது நினைவாக அந்தமான் நிக்கோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் உள்ள விமான நிலையத்திற்கு வீர் சவார்கர் சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டது.