சீக்கிய சமூகத்தினரின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் அவர்களின் நான்கு மகன்களின் தியாகத்தினை இந்த நாள் குறிக்கிறது.
அவர்கள் தங்களது சீக்கிய விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றை நிலை நிறுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான தங்களது அசாதாரணமான துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர்.
1705 ஆ ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சம்கௌர் போரின் போது இரண்டு மூத்த மகன்களான அஜித் சிங் மற்றும் ஜுஜார் சிங் ஆகியோர் துணிந்து தங்கள் உயிர்களைத் துறந்தனர்.
அவர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்திய அரசு ஆனது 2022 ஆம் ஆண்டில் இந்த நாளைத் தொடங்கியது.