TNPSC Thervupettagam

வீர தீர விருதுகள் 2024

July 10 , 2024 8 days 80 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆயுதப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச காவல்துறையின் பணியாளர்களுக்கு 36 வீர தீர விருதுகளை வழங்கினார்.
  • புது டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் நடந்த பாதுகாப்புத் துறை  விருது வழங்கீட்டு விழாவின் போது (கட்டம்-1) இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்த வீரதீர விருதுகளில் பத்து கீர்த்தி சக்ராக்கள் மற்றும் 26 சௌர்ய சக்ரா விருதுகளும் அடங்கும்.
  • ஏழு வீரர்களுக்கு மரணத்திற்குப் பின்னதான கீர்த்தி சக்ராகளும் மற்றும் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பின்னதான சௌரிய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
  • முனைப்பு மிக்க துணிச்சல், தளர்வுறாத தைரியம், கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியப் படை வீரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்