குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆயுதப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச காவல்துறையின் பணியாளர்களுக்கு 36 வீர தீர விருதுகளை வழங்கினார்.
புது டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் நடந்த பாதுகாப்புத் துறை விருது வழங்கீட்டு விழாவின் போது (கட்டம்-1) இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த வீரதீர விருதுகளில் பத்து கீர்த்தி சக்ராக்கள் மற்றும் 26 சௌர்ய சக்ரா விருதுகளும் அடங்கும்.
ஏழு வீரர்களுக்கு மரணத்திற்குப் பின்னதான கீர்த்தி சக்ராகளும் மற்றும் ஏழு பேருக்கு மரணத்திற்குப் பின்னதான சௌரிய சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
முனைப்பு மிக்க துணிச்சல், தளர்வுறாத தைரியம், கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியப் படை வீரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.