உணவு மற்றும் விவசாய அமைப்பானது (Food and Agriculture Organization) படைப்புழுக்களால் ஏற்படும் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக FAW (Fall Armyworm) கட்டுப்பாட்டிற்கான சர்வதேச நடவடிக்கை என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
வீழ்ச்சி படைப்புழு (FAW) என்பது சர்வதேச வர்த்தகத்தினால் தனது இயற்கையான பரவும் திறன் மற்றும் வாய்ப்புகளின் காரணமாக வேகமாகப் பரவும் திறன் கொண்ட அபாயகரமான எல்லை தாண்டிய (எல்லைகளைத் தாண்டி பரவும்) ஒரு பூச்சியாகும்.
படைப்புழு வகையிலான கம்பளிப்புழு என்பது பல்வேறு அத்திப்பூச்சி வகைகளின் லார்வா நிலையாகும்.
FAW ஆனது சகாராவைச் சுற்றியுள்ள ஆப்பிரிக்க நாடுகள், ஆசியா மற்றும் அதன் கிழக்கு நாடுகள் முழுவதும் பரவிக் காணப்படுவதன் மூலம் மில்லியன் கணக்கிலான சிறுநில விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
FAWஐ ஒழிக்க முடியாது.
ஒருங்கிணைந்த நோய்ப்பூச்சி மேலாண்மை நடவடிக்கைகளின் மூலம் விவசாயிகளின் விவசாயப் பயிர்முறைகளில் FAWஐ ஒரு நீடித்த அளவில் கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு அதிக அளவு உதவி தேவைப்படுகின்றது.