இந்திய ஆவணப் படமான ‘ஐம் ஜீஜா’ ஆனது புது தில்லியில் நடத்தப் பட்ட 'ஊனமுற்றோர் பிரச்சினைகள் குறித்த வீ கேர் திரைப்பட விழாவின்' 14 வது பதிப்பில் '30 நிமிடங்களுக்குக் கீழ் உள்ள பிரிவில்' சிறந்த விருதைப் பெற்றுள்ளது.
இயலாமை மற்றும் ஊனமுற்றோர் பற்றிய ஒரே மாதிரியான விஷயங்களின் மீது திரைப்படங்கள் கவனத்தைச் செலுத்தின.
சுவாதி சக்ரவர்த்தி இயக்கிய ஐம் ஜீஜா திரைப்படமானது, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற ஆர்வலரான ஜீஜா கோஷின் கதையைச் சொல்கின்றது.
விக்கி காந்த்பூரால் இயக்கப்பட்ட மற்றொரு இந்தியத் திரைப்படமான போஸ்ட் டார்க், '5 நிமிடங்களுக்கு கீழ்' என்றபிரிவில் ஜூரியின் பாராட்டைப் பெற்றது.
இந்த விழாவானது யுனெஸ்கோ, இந்தியா மற்றும் பூடானுக்கான ஐக்கிய நாடுகளின் தகவல் மையம் மற்றும் புது தில்லியைத் தலைமை இடமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான பிரதர்ஹுட் ஆகியவற்றினால் இணைந்து நிறுவப்பட்டது.