முதல்வர் M.K. ஸ்டாலின் அவர்கள் முழுநேர அன்னதானம் வழங்கும் திட்டம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டமானது திருச்செந்தூரிலுள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயம், சமயபுரம் மாரியப்பன் ஆலயம் மற்றும் திருத்தணியிலுள்ள சுப்ரமணிய சுவாமி ஆலயம் ஆகியவற்றில் தொடங்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை என எந்த நேரத்திலும் பக்தர்கள் உணவினைப் பெற இயலும்.
ஸ்ரீரங்கத்திலுள்ள அருள்மிகு ரங்கநாதர் ஆலயம் மற்றும் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் ஆகியவை தற்போது முழுநேர அன்னதானத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வரும் மற்ற இரண்டு கோயில்களாகும்.