திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் (சுமார் 30 பில்லியன் டாலர்கள்) பதிவாகியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள், 1933 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து முதல் முறையாக அதன் நிகர மதிப்பை அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் நிலப் பகுதிகள், கட்டிடங்கள், வங்கிகளில் உள்ள பணம் மற்றும் தங்க வைப்புத் தொகைகள், பக்தர்கள் கோயிலுக்கு வழங்குகின்ற காணிக்கைகள் ஆகியவை அடங்கும்.