TNPSC Thervupettagam
November 19 , 2022 611 days 282 0
  • இந்தியாவில் பிறந்து நோபல் பரிசு பெற்றவரான பேராசிரியர் வெங்கி ராம கிருஷ்ணன், அறிவியலுக்கான அவரது தனித்துவமானச் சேவைக்காக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மூலம் பெருமைமிகு தகுதிக்கான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • ஐக்கியப் பேரரசைச் சேர்ந்த மூலக்கூறு விஞ்ஞானியான இவர், 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மறைந்த தனது இறப்பிற்கு முன்பாக அமரர் இரண்டாம் எலிசபெத் ராணியால் ஒரு வரலாற்று ஆணை மூலம் நியமனம் செய்யப் பட்ட ஆறு விருதாளர்களில் ஒருவர் ஆவார்.
  • மேலும் மூன்றாம் சார்லஸ் மன்னரால் நியமிக்கப்பட உள்ள முதல் நபரும் இவரே ஆவார்.
  • இவர் தமிழ்நாட்டில் சிதம்பரம் நகரில் பிறந்தவர் ஆவார்.
  • இவர் 2009ம் ஆண்டில் தனது எலும்புக் கட்டமைப்பு மீதான ஆராய்ச்சிக்காக வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றதோடு, 2012 ஆம் ஆண்டில் ராணியால் வீரப் பெருந்தகை அல்லது நைட் என்ற பட்டமும் அளிக்கப்பட்டார்.
  • இந்த தகுதிக்கான சிறப்பு விருதானது 1902ம் ஆண்டில் ஏழாவது எட்வர்ட் மன்னரால் நிறுவப் பட்டது,
  • தகுதிக்கான சிறப்பு விருதானது பிரிட்டிஷ் பேரரசால் அளிக்கப்படுகின்ற ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த கௌரவத்திற்கான முத்திரை ஆகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்