TNPSC Thervupettagam

வெட்டுக்கிளிகள் ஊடுருவல் – குஜராத்

December 29 , 2019 1796 days 775 0
  • குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை புதிதாகப் பிறந்த வெட்டுக்கிளிகள் அல்லது உள்ளூரில் டிடிஸ் என்று அழைக்கப்படும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
  • குஜராத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பனஸ்கந்தா என்ற மாவட்டம் விளங்குகின்றது.
  • பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தப் பூச்சிகள் பறந்து இங்கு வந்துள்ளன.
  • செங்கடல் கடற்கரையில் உள்ள சூடான் மற்றும் எரித்திரியா ஆகிய நாட்டில் இந்த  வெட்டுக்கிளிகள் தோன்றியுள்ளன.
  • இந்தப் பூச்சிகள் பகலில் பறந்து இரவில் பண்ணைகளில் குடியேறுகின்றன. இவைகள் குடியேறுவதைத் தடுப்பது மிகவும் கடினமாகும்.
  • இத்தாலியின் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) DLIS (பாலைவன வெட்டுக்கிளி தகவல் சேவை - Desert Locust Information Service) செயல்படுத்துகின்றது.
  • இந்த வெட்டுக்கிளி ஊடுருவலானது ஜோத்பூரில் உள்ள வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பினாலும் (Locust Warning Organization - LWO) கணிக்கப் பட்டது.
  • இது ICARன் (இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் - Indian Council of Agricultural Research) கீழ் செயல்படுகின்றது.
  • குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பாலைவனப் பகுதியை LWO அமைப்பு கண்காணிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்