குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை புதிதாகப் பிறந்த வெட்டுக்கிளிகள் அல்லது உள்ளூரில் டிடிஸ் என்று அழைக்கப்படும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
குஜராத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பனஸ்கந்தா என்ற மாவட்டம் விளங்குகின்றது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தப் பூச்சிகள் பறந்து இங்கு வந்துள்ளன.
செங்கடல் கடற்கரையில் உள்ள சூடான் மற்றும் எரித்திரியா ஆகிய நாட்டில் இந்த வெட்டுக்கிளிகள் தோன்றியுள்ளன.
இந்தப் பூச்சிகள் பகலில் பறந்து இரவில் பண்ணைகளில் குடியேறுகின்றன. இவைகள் குடியேறுவதைத் தடுப்பது மிகவும் கடினமாகும்.
இத்தாலியின் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO - Food and Agriculture Organization) DLISஐ (பாலைவன வெட்டுக்கிளி தகவல் சேவை - Desert Locust Information Service) செயல்படுத்துகின்றது.
இந்த வெட்டுக்கிளி ஊடுருவலானது ஜோத்பூரில் உள்ள வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பினாலும் (Locust Warning Organization - LWO) கணிக்கப் பட்டது.
இது ICARன் (இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் - Indian Council of Agricultural Research) கீழ் செயல்படுகின்றது.
குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பாலைவனப் பகுதியை LWO அமைப்பு கண்காணிக்கின்றது.