TNPSC Thervupettagam

வெண்ணிறக் குறியீடு கொண்ட தானியங்குப் பண வழங்கீட்டு இயந்திரங்கள்

July 30 , 2023 483 days 300 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் வெண்ணிறக் குறியீடு கொண்ட தானியங்குப் பண வழங்கிட்டு இயந்திரங்களை (WLAs) நிறுவவும், சொந்தமாக்கவும் மற்றும் இயக்கவும் அனுமதி அளித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகளின் பரவலை விரிவுபடுத்துவதையும், நிதி உள்ளடக்கத்தை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெண்ணிறக் குறியீடு கொண்ட தானியங்குப் பண வழங்கிட்டு இயந்திரங்கள் ஆனது, வங்கிகள் சாராத நிறுவனங்களால் அமைக்கப்பட்டு, சொந்தமாக மற்றும் இயக்கப் படும் ஏடிஎம்கள் ஆகும்.
  • வங்கி சாராத ATM இயக்க நிறுவனங்கள் 2007 ஆம் ஆண்டு பண வழங்கீட்டு மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகரிக்கப் பட்டவை ஆகும்.
  • வங்கிகள் வழங்கும் பற்று /கடன் / முன்னதாக பணம் செலுத்தப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குகின்றன.
  • கணக்கு குறித்தத் தகவல், பண வைப்பு, கட்டணம் செலுத்துதல், சிறு கணக்கு அறிக்கைகள், PIN மாற்றம் மற்றும் காசோலைப் புத்தக கோரிக்கைகள் போன்ற சேவைகளையும் இவை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்