வடக்கு கர்நாடகாவின் கப்படகுடா மலைக்குன்றுகளில் உள்ள கடகோலா கிராமத்தில் முதன்முறையாக வெண்பிடரி பட்டாணிக்குருவி தென்பட்டுள்ளது.
இது பரிடே என்ற பட்டாணிக் குருவி குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு மரக்கிளைகளில் அமர்வதற்கு ஏற்ற கால் வடிவமைப்புகளைக் கொண்ட (பாசரின்) பறவையினமாகும்.
இந்தியாவில் மட்டுமே காணப்படும் இப்பறவையானது, மேற்கு இந்தியா மற்றும் தென் இந்தியாவில் இரண்டு தனித்தனி குழுக்களாக மிக வறண்ட முட்கள் நிறைந்த புதர் காடுகளில் காணப்படுகிறது.
ஆங்காங்கே மட்டுமே காணப்படும் இந்த இனம் ஆனது அருகும் அபாயத்தில் உள்ளது.
இந்தியாவில், இந்தப் பறவை இராஜஸ்தான், குஜராத், தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், வடக்கு தமிழ்நாடு, ஹரியானா மாநிலம் மற்றும் தெற்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
தெற்கு கர்நாடகாவில், இது காவேரி வனவிலங்குச் சரணாலயத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.