குஜராத்தின் கம்பாட் வளைகுடாவில் இருந்து வெனடியம் என்ற அரிய தனிமம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் கடற்கரை வண்டல்களில் வெனடியம் இருப்பது பற்றிய முதல் அறிக்கை இதுவாகும்.
டைட்டானோமேக்னடைட் என்பது இந்தத் தனிமத்தின் முதன்மை மூல ஆதாரம் ஆகும் என்பதோடு உலகின் 88% வெனடியம் இதிலிருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது.
எஃகு மற்றும் டைட்டானியம் மற்றும் வெனடியம் ஆக்சிஜனேற்ற ஒடுக்க மின் கலன்கள் போன்றவற்றை வலுப்படுத்துவதற்கு வெனடியத்தினைப் பயன்படுத்த இயலும் .
டைட்டானியம் மற்றும் அலுமினியத்துடன் இதனைக் கலக்கும்போது, அரிமானம் மற்றும் அதிக வெப்பநிலைக்கு எதிராக நீடித்து நிலைத்திருப்பதால் ஜெட் என்ஜின் பாகங்கள் மற்றும் மின் பயன்பாட்டுக் கூறுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.