TNPSC Thervupettagam

வெனிசுலாவின் ஹம்போல்ட் பனிப்பாறை வீழ்ச்சி

May 19 , 2024 189 days 241 0
  • நவீன காலத்தில் தனது பனிப்பாறைகள் அனைத்தையும் முற்றிலுமாக இழந்த முதல் நாடாக வெனிசுலா கருதப் படுகிறது.
  • தென் அமெரிக்க நாட்டில் எஞ்சியிருக்கும் பனிப்பாறையானது ஆண்டிஸ் மலைத் தொடரில் உள்ள ஹம்போல்ட் அல்லது லா கொரோனா ஆகும்.
  • இது தற்போது "பனிப்பாறை என வகைப்படுத்த முடியாத அளவுக்கு சிறியதாக" மாறி விட்டது.
  • எனவே, இந்தப் பனிப்பாறையானது ஒரு பனிக் களமாக மறுவகைப்படுத்தப் பட்டு உள்ளது.
  • இந்த நாடு அதன் சியரா நெவாடா டி மெரிடா மலைத் தொடரில் 6 பனிப்பாறைகளைக் கொண்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் ஹம்போல்ட் தவிர ஐந்து பனிப்பாறைகள் அழிந்து விட்டன.
  • அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை பனிப்பாறைகள் இல்லாத நாடுகளாக மாற உள்ள நாடுகளின் பட்டியலில் அடுத்த வரிசையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்