ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆனது, வெனிசுலா கச்சா எண்ணெயை இடைத்தரக நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளன.
வெனிசுலா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு தற்காலிகமாக நீக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, சாத்தியமான நேரடி விற்பனைக்காக PDVSA (வெனிசுலாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம்) நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.