TNPSC Thervupettagam

வெப்பத்தாற் பகுப்பு ஆலை

April 21 , 2019 1917 days 629 0
  • பெருநகர சென்னை மாநகராட்சியானது (GCC - Greater Chennai Corporation) நெகிழிக் கழிவுப் பொருட்களைக் கையாள்வதற்காகவும் அவற்றிலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்காகவும் ஒரு வெப்பத்தாற் பகுப்பு (Pyrolysis Plant) ஆலையை நிறுவ முடிவு செய்து கொண்டிருக்கின்றது.
  • GCC ஆனது ஒவ்வொரு நாளும் 500 டன்கள் எடையுள்ள நெகிழிக் கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது.
  • வெப்பத்தாற் பகுப்பு செயல்முறையானது ஆக்ஸிஜன் வாயு இல்லாத நிலையில் மிகவும் அதிக வெப்ப நிலையின் கீழ் நெகிழிப் பொருட்களில் உள்ள கரிமச் சேர்மங்களை சிதைத்து அவற்றை எரிபொருளாக மாற்றுகின்றது.
  • இந்த எரிபொருளானது ஒரு லிட்டர் ரூ.25 முதல் ரூ.35 வரை விற்கப்படுகின்றது. ஒரு லிட்டர் எரிபொருளைத் தயாரிப்பதற்கு 2 கிலோ கிராம் நெகிழிக் கழிவுப் பொருள் தேவைப்படுகின்றது.
  • இந்த எரிபொருளானது சிமெண்ட், எஃகு, செங்கல் தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்களில் பயன்படுத்தப் படுகின்றது.
  • மேலும் இந்த எரிபொருளானது சரக்கு வண்டிகள், மின்னாக்கி அமைப்புகள், நீராவிக் கப்பல்கள் மற்றும் இதர வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்